Show all

பணமதிப்பு நீக்தத்திற்கு சவுக்கடி! மோடி-ஜெட்லி பொருளாதாரத்தின் சவால்கள் என்ற நூலில், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய்தாள்கள் செல்லாது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநள்ளிரவில் மிகப் பெருமிதமாக இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் வைப்பு செய்ய, மாற்ற 50 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. பெரிய தலைகள் எல்லாம் கோடாண கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய்தாள்களாக மாற்றிக் கொண்டார்கள். எப்படி சாத்தியப் பட்டது என்பது அமித்சாவுக்கே வெளிச்சம். வங்கிகளில் வரிசையில் காத்திருந்ததில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் மரணித்தார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரை பெண்களின் ஐந்தறை பெட்டி சேமிப்புக்கு மிகப் பெரிய ஆப்பாக அமைந்தது. கோவை, திருப்பூர் கடும் தொழில் பாதிப்புக்கு உள்ளாயின.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்தனர். அப்போது இது குறித்து நடுவண் அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது பதவிக்காலம் முடிய ஓராண்டு முன்பே திடீரென பதவியை விட்டு விலகி விட்டார்.

தற்போது, அரவிந்த் சுப்பிரமணியன், மோடி – ஜெட்லி பொருளாதாரத்தின் சவால்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் பணமதிப்பு நீக்கம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதில், பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டது, மிகப்பெரிய, கொடுமையான நிதி அதிர்ச்சி. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் மிக வேகமான சரிவை சந்தித்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு முந்தைய 6 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும்போது, அடுத்த 6 காலாண்டுகளில் இந்த வளர்ச்சி குறைந்து விட்டது.

பணமதிப்பு நீக்கம் என்ற பெரிய அதிர்ச்சி காரணமாக அமைப்பு சாராத தொழில்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டன. இதனால் வேறு வழியின்றி மின்னணு பரிமாற்றத்துக்கு மாறினர். சரக்கு-சேவை வரி நடைமுறை, கச்சா எண்ணெய் விலை, வட்டி விகிதம் ஆகியவையும் பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டன என தெரிவித்துள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேல்தட்டு மக்களுக்கெதிராக எடுக்கப்பட்டது அல்ல. என்றும் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,988.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.