Show all

இந்தியாவின் பாரம்பரியத்திற்கு மதவெறி சித்தாந்தத்தால் ஆபத்து: சோனியா காந்தி.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் பாரம்பரியத்திற்கு மதவெறி சித்தாந்தத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க, மக்கள் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது வழங்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய சோனியா காந்தி,

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் பாரம்பரியத்திற்கு, மதவெறி சித்தாந்தத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டை விட, எதுவும் பெரிதல்ல என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டிக்காட்டியதை, நினைவு கூர்ந்த சோனியா காந்தி, நாட்டில் சகிப்புத்தன்மைக்கு எதிராக காட்டுமிரண்டித்தனமான திட்டம் உள்ளதால், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வராமல், வேற்றுமையில் ஒற்றுமை காண முடியாது என இந்திரா காந்தி தெரிவித்ததையும், சோனியா சுட்டிக்காட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.