Show all

பிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்; சுப்பிரமணியசுவாமி.

நாட்டில் சகிப்புத்தன்மை முறையாக நிலவும் போது, சுற்றுச்சூழலை வளமாக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

சமீபத்திய வன்முறை கலாசாரம் தொடர்பாக நடுவண் அரசை மறைமுகமாக அவர் சாடியிருக்கிறார் .

டில்லி ஐ ஐ டி யில் நடந்த விழாவில் பங்கேற்று இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், நாட்டில் கருத்து சுதந்திரம், விவாதம், மற்றும் சுய உரிமை இவை யாவும் அவசியம்.

இவை பராமரிக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் . உணர்வுப்பூர்வமான விஷயத்தில் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

சகிப்புத் தன்மையும், ஒருவருக்கொருவர் வழங்கும் மதிப்பும் நல்ல சமத்துவ சூழலை உருவாக்கும் . ஒரு விஷயத்தில் தடை என்பது யாருக்கும் தீர்வாக மாற முடியாது. அரசியல் ரீதியான தவறான வழிகாட்டுதல்கள் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும் . தடைகள் வாய்பூட்டாக அமைந்து விடும் . இந்திய கலாசாரம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் . சகிப்புத்தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் போராட வேண்டியது அவசியம். சகிப்புத்தன்மையின்மை , பாதுகாப்பின்மைக்கு சமமாகும் .

எந்த விஷயத்திலும் திணிப்பு இருக்க கூடாது. மாற்று கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய மாட்டிறைச்சி விவகாரம், கறுப்பு மை வீச்சு , சகிப்புத்தன்மை குறைவு, விருதுகள் திரும்ப வழங்கும் எழுத்தாளர்கள் ஆகியன தொடர்பாக இவர் இந்த கருத்தை வெளியிட்டு, நடுவண் அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

இவரது பேச்சுக்கு பா. ஜ.க, தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார், தனது டுவிட்டரில் , ரகுராம் ராஜன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும் பிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.