Show all

அமெரிக்கா போர்க் கப்பல்கள் அத்துமீறினால் போர் தொடுப்போம் என சீனா எச்சரிக்கை

தென் சீனக் கடலில் போர்க் கப்பல்கள் அத்துமீறினால் போர் தொடுப்போம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் சீன கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் பிலிப்பைன்ஸ், ஜப்பான், வியட்நாம், மலேசியா, தைவான், புருனே ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. தென் சீன கடலில் மணல் கற்களை கொட்டி சீனா பல செயற்கை தீவுகளை உருவாக்கி வருகிறது. அதில் விமானப்படை தளம், கடற்படை தளம் மற்றும் கலங்கரை விளக்கம் கட்டுகிறது. அதற்கு அமெரிக்காவும், பசிபிக் நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சமீபத்தில் தென் சீன கடலில் அமெரிக்க விமானம் ரோந்து சுற்றியது. அங்கு செயற்கை தீவுகளில் சீனா கட்டி வரும் கட்டுமான பணிகளைப் போட்டோ எடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சீனா கட்டுப்பாட்டில் உள்ள ஸ்பார்ட்டி தீவுக்கு மிக அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் கடந்து சென்றது.

அது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக கண்டனம் தெரிவித்தது. ஆனால் அது சீனாவின் கடல் பகுதி இல்லை. சர்வதேச எல்லை என அமெரிக்கா கூறிவிட்டது.

இந்த நிலையில் சீன கடற்படை தளபதி அட்மிரல் வூ செங்லி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க் கப்பல்கள் அத்து மீறுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க கடற்படை தளபதி அட்மினரல் ஜான் ரிச்சர்ட்சனை கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்க கடற்படை, மற்றும் விமானப்படை தொடர்ந்து அத்து மீறினால் கடற்பரப்பு, மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்துவோம். ஒரு சிறிய சம்பவம் கூட இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழலை ஏற்படுத்திவிடும் என தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.