Show all

டெல்லி அரசின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க மோடி அரசு முயற்சிக்கிறது: கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் செயலாளர்  மற்றும் 6பேர் ஒரு நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார்கள்.

 

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் அந்த மாநில முதல்வராக உள்ளார். அவரது முதன்மைச்செயலாளராக ராஜேந்திர குமார் இருந்தார் . அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து டெல்லி  அரசில் உள்ள துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்களை பெறுவதற்கு பல ஆண்டுகளாக உதவி செய்துள்ளார்.

 

எண்டோவர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 5 ஒப்பந்தங்களை பெற அவர்  முறைகேடு செய்தார் என சி.பி.ஐ. குற்றம் சாட்டி கைது செய்துள்ளது.  அந்த நிறுவனத்திற்கு  தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரூ50 கோடிக்கு மேலான ஒப்பந்தங்களை ராஜேந்திர குமார் அளித்துள்ளார் என்றும் அவரை கிரிமினல் சதி, ஊழல் தடுப்புச்சட்டத்தில் கைது செய்துள்ளதாகவும் மத்திய புலனாய்வு கழகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சதி செய்து டெல்லி அரசுக்கு ரூ 12கோடி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள் என சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்திற்காக சாதமாக நடந்து கொண்டதால் அந்த அதிகாரிகள் ரூ.3 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திர குமார் 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவு அதிகாரி ஆவார். அவர் உத்தரப்பிரதேச பிரிவு அதிகாரி. அவரும்  தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் 6பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான முறைகேடு வழக்கு டெல்லி கூடுதல் மெட்ரோ பாலிடன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அவர்களை ஒரு நாள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது அதிகாரிகளை கைது செய்வதன் மூலம் டெல்லி அரசின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க மோடி தலைமையிலான நடுவண் அரசு முயற்சிக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.