Show all

காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளில் செய்யத் தவறியதை நான் 50 மாதங்களில் நிறைவேற்றுவேன்: பிரதமர் நரேந்த

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசி சென்றார். ஏற்கனவே இரண்டு முறை அவருடைய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் வாரணாசி வந்தார். மாநில கவர்னர் ராம்நாய்க், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

அங்கு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச ரிக்ஷா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் காங்கிரஸ் அரசு மீது மிக கடுமையாக விமர்சித்தார். வறுமையை ஒழிப்போம் என்று முந்தைய ஆட்சியினர் கூறி வந்தனர். ஆனால் 50 ஆண்டுகளாகியும் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. அதற்கான உறுதியான எந்த திட்டங்களும் இல்லை. வறுமையை ஒழிப்போம் என்று வெற்று கோஷங்களை முழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

வங்கிகளை நாட்டுடமையாக்கி 50 ஆண்டுகளாகியும் ஏழைகளுக்கு வங்கி சேவை கிடைக்கவில்லை. எங்கள் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு வங்கி சேவை கிடைக்கச் செய்துள்ளோம்.

இதன் மூலம் குறுகிய காலத்தில் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு பணம் வங்கியில் சேர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.நான் எந்த அரசையோ, கட்சியையோ குறை கூற விரும்பவில்லை. ஆனால் ஏழைகளுக்கான திட்டங்களை துவங்குவதற்கு வேண்டிய தருணம் வந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.