Show all

கிரிக்கெட் மைதானத்தில் அடித்துக்கொண்ட வீரர்கள்!

பெர்முடாவில், கிளிவ்லேண்ட் கவுண்ட் கிரிக்கெட் கிளப்புக்கும் வில்லோ கட்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது இச்சம்பவம் நடைபெற்றது. போட்டியின் நடுவே ஓவர் முடிந்தபோது விக்கெட் கீப்பர் ஜாஸன் ஆண்டர்சனுக்கும் பேட்ஸ்மேன் ஜார்ஜ் ஓ பிரெய்னுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முதலில் வாய்த்தகராறாக இருந்த சண்டை பிறகு கைகலப்பாக மாறியது.

விக்கெட் கீப்பர் கைகளால் தாக்கியதால் பேட்ஸ்மேன் ஜார்ஜ் ஓ பிரெய்ன் தன்னுடைய பேட்டைக் கொண்டு பதிலுக்குத் தாக்க முயன்றார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பெவிலியனில் இருந்து வீரர்கள் ஓடிவந்து தடுத்ததால் நிலைமை சுமூகமானது.

இதன்பிறகு விக்கெட் கீப்பர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆட்டம் மீண்டும் தொடர்ந்ததில் கிளிவ்லேண்ட் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டம் முடிந்தபிறகு இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்தது. அதன்படி, விக்கெட் கீப்பர் ஜாஸனுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பேட்ஸ்மேன் ஜார்ஜுக்கு 6 மாத கால இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.