Show all

மகாராஷ்டிர அரசும் நாட்டியவிடுதிகளும்.

மகாராஷ்டிர அரசு கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வந்த நாட்டியவிடுதி தடைச்சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் நாட்டியவிடுதிகள் பிரபலம். இதற்கு மகாராஷ்டிர அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு தடைவிதித்தது.  இதைத் தொடர்ந்து நாட்டியவிடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி நடனத்தைப் பார்த்தவர்கள் மற்றும் நடனமாடிய பெண்களைக் கைது செய்தனர். நாட்டியவிடுதிகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து நாட்டியவிடுதிகள் உரிமையாளர்கள் மற்றும் நடனப்பெண்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர்கள் முறையீடு செய்தனர். இதனைக் கடந்த 2013ம்ஆண்டில் உச்சநீதிமன்றம் விசாரித்து நாட்டியவிடுதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நாட்டியவிடுதிகளுக்கு எதிராக புதிய சட்டம்  இயற்றப்பட்டது. அனைத்து கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக சட்டம் நிறைவேறியது. இதன் காரணமாக உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த பின்னரும் மும்பையில்  நாட்டியவிடுதிகள் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

புதிய சட்டம் செல்லாது என நடனப்பெண்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்தது. இதை உச்சநீதிமன்றம் விசாரித்து மகாராஷ்டிர அரசு கொண்டு  வந்த புதிய சட்டத்துக்கு இடைக்கால தடைவிதித்தது.

இருப்பினும் பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் நாட்டியவிடுதிகளை முறைப்படுத்த  வேண்டும் என உத்தரவிட்டது.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.