Show all

ஏவுகணையின் சோதனை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தம்.

நடுவண் அரசுக்குச் சொந்தமான டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கிய நிர்பய் என்ற ஏவுகணையின் சோதனை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையைத் தரையில் இருந்தும், கப்பலில் இருந்தும், வானில் இருந்தும், நீர்மூழ்கிக்கப்பலில் இருந்தும் ஏவ முடியும். ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ஒரே முறை பாய்ந்து சென்று, எதிரியின் பல்வேறு இலக்குகளை வீழ்த்தும் வல்லமை படைத்ததாகும்.

இந்த ஏவுகணை நேற்று மதியம் ஒடிசா மாநிலம், பாலசோர் அருகே அமைந்துள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தின் 3-வது ஏவுவளாகத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அதில் திடீர் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அதன் சோதனையை பாதியிலேயே முடித்துக்கொண்டனர்.

ஏவுகணை குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.