Show all

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து

சிறுபான்மையினர் என்ற வார்த்தையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என நடுவண் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்டுபாடின்றி மக்கள் தொகை அதிகரித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்றார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியா வளர்ச்சி இலக்கை எட்ட முடியும் என்று கூறிய கிரிராஜ் சிங் இதற்காக அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான மக்கள் தொகை கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

சில மாவட்டங்கள், கிராமங்களில் 70 சதவீதம் அளவிற்கு உள்ள மக்கள் கூட சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுவதாக கூறிய அவர் இந்த நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மையினர் என்பதற்காக வரையரையை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை குறிவைத்து  மத்திய சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ள இந்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.