Show all

இந்திய நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை வெற்றி

இந்திய நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை ஒடிசா கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த கண்டம் விட்டு கண்டம் தாக்கும் இந்த ஏவுகணையை இந்திய ராணுவம் சோதனை நடத்தியது.

 

சுமார் 700 கி.மீ. தூரத்தை 9 நிமிடம் 36 வினாடிகளில் கடந்து சென்று இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 12 டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணையில் ஒரு டன் எடையுள்ள அணு பொருட்களை சுமந்து செல்லும் ஆற்றல் உடையது. எடையை குறைக்கும்பட்சத்தில் இந்த ஏவுகணை பாய்ந்து செல்லும் தூரத்தை அதிகரிக்க செய்ய முடியும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.