Show all

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டது: ஜடேஜா அதிரடி நீக்கம்

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு பெங்களூரில்  நடந்தது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர், வீரர்களை தேர்வு செய்து அறிவித்தனர். கேப்டனாக டோனி நீடிக்கிறார். வங்கதேசம் ஏ அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆல் ரவுண்டர் குர்கீரத் சிங் மான் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.  மேலும் வேகப் பந்துவீச்சாளர் ஶ்ரீநாத் அரவிந்த், அனுபவ ஸ்பின்னர் ஹர்பஜன் ஆகியோருக்கும்  வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது

கர்நாடகாவை சேர்ந்த இளம் வேகம் அரவிந்த், அனுபவ ஸ்பின்னர் ஹர்பஜன் இருவரும் டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இரு அணியிலுமே தேர்வு செய்யப்படவில்லை.

டி20 அணி: டோனி (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்யா ரகானே, அம்பாதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, அஷ்வின், அக்சர் பட்டேல், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், மோகித் ஷர்மா, அமித் மிஷ்ரா, ஶ்ரீநாத் அரவிந்த்.

ஒருநாள் அணி: டோனி (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்யா ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, அஷ்வின், அக்சர் பட்டேல், குர்கீரத் சிங் மான், அமித் மிஷ்ரா, புவனேஷ்வர் குமார், மோகித் ஷர்மா, உமேஷ் யாதவ்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.