Show all

மேகி நூடுல்ஸ் உரிய அனுமதியோடு விற்பனைக்காக மீண்டும் சந்தைகளுக்கு: நெஸ்லே உறுதி.

மேகி நூடுல்ஸ் உற்பத்தியை 3 மாநிலங்களில் உள்ள ஆலைகளில் தொடங்கியிருப்பதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற மாநில ஆலைகளிலும் உற்பத்தியைத் தொடங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் இத்தகவல்களை நெஸ்லே தெரிவித்துள்ளது.

3 ஆலைகளில் உற்பத்தியான நூடுல்ஸ்கள் அரசு அங்கீகரித்த 3 ஆய்வகங்களில் மீண்டும் சோதிக்கப்படும் என்றும் உரிய அமைப்புகளிடம் இருந்து அனுமதி கிடைத்த பின்னரே அது விற்பனைக்காக சந்தைகளுக்கு அனுப்பப்படும் என்றும் நெஸ்லே உறுதியளித்துள்ளது.

மேகி நூடுல்ஸ்களில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளுட்டாமேட் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக உள்ள புகாரின் பேரில் இவற்றை விற்க கடந்த ஜூன் மாதம் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிதாக தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ்கள் 3 ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டன. உரிய அனுமதி கிடைத்ததை அடுத்து, அதிகளவில் உற்பத்தி தொடங்கப்பட்டு மீண்டும் ஒரு முறை சோதிக்கப்பட இருக்கிறது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.