Show all

விரைவில் மேகி நூடுல்ஸ் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம்.

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் குறைவான காரீயம் இருப்பது ஆய்வுக்கூட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், விரைவில் மேகி நூடுல்ஸ் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வௌ;ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மூன்று பரிசோதனைக் கூடங்களில் மேகி நூடுல்ஸின் 90 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வு முடிவுகளின்படி, அந்த மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான காரீயம் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, மேகி நூடுல்ஸ் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும். புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட நூடுல்ஸும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னர், சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் காரீயமும், மோனோ சோடியம் குளூட்டாமேட் என்னும் வேதிப் பொருளும் இருப்பது பரிசோதனைகளில் தெரியவந்ததையடுத்து பல மாநில அரசுகளும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதித்தன.

இதன்காரணமாக, 30,000 டன்கள் எடையிலான மேகி நூடுல்ஸ் பொட்டலங்களைச் சந்தைகளில் இருந்து நெஸ்லே இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்று அழித்தது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.