Show all

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தலைவர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சென்னை, கோவை,திருச்சி, சேலம், தஞ்சை , மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் 91 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரை முதல் தாளாக சிவில் இஞ்சினியரிங் தேர்வும் பிற்பகல் 2-30 மணி முதல் 3-30 மணி வரை பொது அறிவுக்கான தேர்வும் நடைபெற்றது. . 213 பணியிடங்களுக்காக நேற்று நடைபெற்ற இந்தத் தேர்வை, 27 ஆயிரத்து 552 பேர் எழுதினர். .

சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியன்,பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் பேசுகையில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் தேர்வுக்கான முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும் எனத் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.