Show all

உண்ண உணவும், வேலையும் இல்லாமல் மிகவும் வறுமையினால் செய்வதறியாது தீ குளித்து...

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 5 குழந்தைகளின் தாயான இவர் உண்ண உணவும், வேலையும் இல்லாமல் மிகவும் வறுமையினால் செய்வதறியாது தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மராத்வாடா மண்டலத்தை தொடர்ந்து வறட்சி வாட்டி வருகிறது. இந்நிலையில் ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் சாப்பிட உணவும் கிடையாது, செய்வதற்கு வேலையும் கிடையாது என்ற நிலையில் 5 குழந்தைகளின் 40 வயது தாய் தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் கூறும் போது மத்திய அரசின் கிராமப்புற வேலை திட்டத்தில்; வேலை செய்து வந்து உள்ளார். போதிய பணம் கிடைத்து இருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்க மாட்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.  மராத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இந்த ஆண்டில் இதுவரையில் மட்டும் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 628 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இந்த மண்டலத்தில் தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையானது 574 ஆகும். வறட்சி, தொடர் நஷ்டம், விவசாய நிலம் விளைச்சலை இழத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.