Show all

மம்தா, குவியும் பாராட்டுகள்! ஆடம்பர அம்பானி வீட்டுத் திருமணத்தை அலங்கரித்த ஓர் எளிமை

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மகள் இசாவின் திருமணம் மும்பையில் நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் வடக்கத்திய மின்மினிகள், கிரிக்கெட் வீரர்கள், அம்பானி உறவினர்கள் பங்கேற்றனர். வடக்கத்திய அதித மின்மினிகள் அமிதாப், அமீர் கான் போன்றவர்கள் கூட விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தனர். வெள்ளித்தட்டுகளில்தான் உணவு பரிமாறப்பட்டது. திருமணத்தில் பங்கேற்றவர்கள்  விலைஉயர்ந்த ஆடைகள், நகைகள் அணிந்து ஆடம்பரத்தை வெளிக்காட்டினர். இசாவின் திருமணத்தில் யார் எந்த ரக ஆடை அணிந்து வந்தனர். அதில், யார் சிறப்பான ஆடை அணிந்திருந்தனர். யார் மோசமான ஆடை அணிந்திருந்தனர் என்றெல்லாம் சில ஊடகங்கள் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தன. 

இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களில் மேற்கு வங்க மம்தாவும் ஒருவர். அம்பானி வீட்டுத் திருமணம் என்றாலும் இவரின் உடையில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல, தான் அணியும் சாதாரண கைத்தறி சேலை கட்டியிருந்தார். காலில் சாதாரண ரப்பர் காலணி அணிந்திருந்தார். அம்பானி வீட்டுத் திருமணத்தில் எளிமையாகத் தெரிந்த ஒரே ஒருவர் இவர்தான் என்று இணைய ஆர்வலர்கள் மம்தாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.