Show all

லாரி உடைமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்!

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் வரியை 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உடைமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் இயங்காது என்றும், தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் இயங்காது என்றும் லாரி உடைமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால், பல கோடி ரூபாய் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்று லாரி உடைமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒரு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு சரக்கு-சேவைரி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும், மோட்டார் வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உடைமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,855. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.