Show all

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என நடுவண் அரசு

 

     டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தினந்தோறும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என நடுவண் அரசு அறிவித்தது.

 

இதைத்தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என நடுவண் அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்தப் பள்ளிகளில் அன்றாடம் தேசியகொடி ஏற்றுமாறு கேந்திரிய வித்யாலயா சங்கேதனின் கூடுதல் கண்காணிப்பாளர் யு.என்.கவரே, பள்ளி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

மாணவர்கள் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக, பள்ளியின் முக்கியமான பகுதியில் தேசியக்கொடியை காலையில் ஏற்ற வேண்டும் எனக்கூறியுள்ள அவர், மாலையில் சூரியன் மறைவுக்கு முன் கொடியை இறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இந்திய தேசியகொடி சட்டம் 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971 போன்றவற்றை பள்ளிகள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

 

நடுவண் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கேந்திரிய வித்யாலயா சார்பில் நாடு முழுவதும் 1100-க்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.