Show all

கெஜ்ரிவால், நஜிப் ஜுங் ஆகியோரை தூக்கியடிப்பதே தனது அடுத்த இலக்காம்

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது தொடர்ந்து புகார் கூறி வந்த பா.ஜ.க மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசுவாமி,

தமது அடுத்த இலக்கு டில்லி துணைநிலை ஆளுநர்,

ஆம் ஆத்மி கட்சி முதல்வர் கெஜ்ரிவால்

ஆகியோர் தாம் என கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை, பிரதமர் நீக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் சுப்பிரமணியன் சுவாமி,

இதையடுத்து தாம் இரண்டாவது முறையாக ஆளுநர் பதவி ஏற்க விரும்பவில்லை என தெரிவித்து ரகுராம் ராஜன்  ஒதுக்கிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிர், கொலை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் கிர், கெஜ்ரிவால் இல்லம் முன்பு அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து சுப்பிரமணியசுவாமி, உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஆளும். பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறப்போராட்டம் நடத்துகிறார்.

அவருக்கு உரிய பாதுகாப்பு தர தவறிவிட்டார் துணை நிலை ஆளுநர் நஜிம் ஜுங்.

இனி, துணை நிலை ஆளுநரும், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் பதவியில் ஒட்டி கொண்டிருக்க தகுதியில்லை.

ரிசர்வ் வங்கி கவர்னர் விவகாரத்தில் எனது அழுத்தம் காரணமாகவே, தானாக விலகினார் ரகுராம் ராஜன்,

இனி முதல்வர் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுனர் நஜிப் ஜுங் ஆகியோரை பதவியில் இருந்து தூக்கியடிப்பதே எனது அடுத்த இலக்கு. அதுமட்டுமின்றி துணை நிலை ஆளுநர் நஜிப் ஜுங், காங். தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலின் ஆதரவாளர். அவரிடம் இன்று வரை தொடர்பு வைத்து கொண்டுள்ளார். எனவே நஜிப் ஜுங்கை நீக்க வேண்டும். . கெஜ்ரிவால் அரசை நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.