Show all

கெஜ்ரிவால் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் இம்ரான் உசேன். மீது லஞ்ச ஊழல் புகார்

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கெஜ்ரிவால் ஆட்சியில் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருப்பவர் இம்ரான் உசேன். இவர் மீது லஞ்ச ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.

 

இவரது உதவியாளர் ஹமத் என்பவர் கட்டிட உரிமையாளரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ரகசிய வீடியோ ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.

 

வடக்கு டெல்லியின் பல்லிமாரன் பகுதியில் சட்ட விரோத கட்டடம் ஒன்றை முறைப்படுத்துவதற்காக கட்டிட உரிமையாளரிடம் ஹமத் லஞ்சம் கேட்பது வீடியோவில் பதிவாகி உள்ளது.

 

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற மந்திரி இம்ரான் பணம் செலவு செய்து இருந்துள்ளார். அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்று வீடியோவில் ஹமத் கூறுகிறார்.

 

இந்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரும், செய்தி தொடர்பாளருமான அஜய் மக்கான் கூறியதாவது:

 

வீடியோவில் லஞ்சம் கேட்கும் நபர் மந்திரி இம்ரான் உசேனின் அலுவலக ஊழியர் ஹமத் ஆவார். அவர்தான் மந்திரி சார்பில் கட்டிட உரிமையாளர் காசிமிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். மாநகராட்சியில் பொறியாளராக இருக்கும் அமைச்சரின் சகோதரரும் தொலைபேசியில் கட்டிட உரிமையாளரிடம் பேசி இருக்கிறார். அந்த உரையாடல்களையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

 

தங்களது ஆட்சி வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி என்று கெஜ்ரிவால் கூறி வருகிறார். அவர் சொல்வது பொய் என்பதை இந்த வீடியோவும், தொலைபேசி உரையாடலும் நிரூபிக்கின்றன. இதை அவருக்கும், சி.பி.ஐ.க்கும் அனுப்ப உள்ளோம்.

 

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர்இம்ரான் உசேன் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.