Show all

காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முன்பாக தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்.

காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முன்பாக தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மீதான நடவடிக்கயை கண்டித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு சின்னம் அணிந்து பாஜக - பிடிபி கூட்டணிக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35 ஏ சட்டபப்பிரிவை பாதுகாக்க வேண்டும் என்று கோரி பதாகைகளுடன் காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசிய மாநாட்டு கட்சி, மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று முழக்கமிட்டனர்.

இப்பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதும் அவைத் தலைவரை எதிர்கட்சி உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.