Show all

மோடி ஆபத்தானவர் என்று நிறுவ முயன்ற இதழியலாளர்கள், பலசாலி என்று மறுத்த ரஜினி, ஆபத்தானவர்தான் என்று இணைய ஆர்வலர்கள்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எதிர்க்கட்சிகள், பாஜகவை ஆபத்தான கட்சி என்று கூறினால், அப்படித்தானே இருக்கும் என்று கிண்டலாக பதில் அளித்தார் நேற்று ரஜினிகாந்த். 

அந்தத் தகவலால் தமிழகமே ரஜினி என்னதான் சொல்கிறார் என்று புலம்பிக் கொண்டிருந்த வேளையில், இன்று ரஜினிகாந்த் இதழியலாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து, விளக்கம் அளித்து குழப்பினார். 

எல்லா கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்க ஒன்றாக சேர்ந்துள்ளார்களே, அந்த கட்சி அவ்வளவு ஆபத்தான கட்சியா என்று கேட்டனர். எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்து கொண்டுள்ளார்கள். அப்படியானால் பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே? பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்வார்கள். என்று கூறினார் ரஜினிகாந்த் இன்று.

மேலும், இப்போது எல்லாம் காணொளி பல பக்கங்களில் இருந்து  எடுக்கிறார்கள். எனவே திரித்து செய்தி வெளியிடாதீர்கள். பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்ற எனது கருத்தை நான் இப்போது சொல்ல முடியாது. நான் முழுமையாக இன்னும் அரசியலில் இறங்கவில்லை. அன்றாட நிகழ்வுகளுக்கு நான் கருத்து கூற முடியாது. அதை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். இதே கேள்வி-பதிலை சொல்லி கொண்டிருந்தால் மக்கள் கடுப்பாகிவிடுவார்கள் என்றும்,

பத்து பேர்கள் எதிர்த்துக்கொண்டு ஒருவருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றால், யார் பலசாலி? அந்த 10 பேரா, அல்லது ஒருவரா? இதைவிட தெளிவாக நான் எதையும் சொல்ல முடியாது? என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்

ஆக இதழியலாளர்கள் மோடி பயங்கரமானவர் என்ற ஐயத்தை தெளிவு படுத்திக் கொள்ள முயன்ற நிலையில், ரஜினிகாந்த் மோடி பலசாலி என்று அளித்த விளக்கம் இணைய ஆர்வலர்களைக் கடுமையாகக் கோபப் படுத்தியிருக்கிறது. இன்று இணையத்தில் மோடி அபயகரமானவர்தான் என்று பதிவுகள் ஓடிக் கொண்டிருக்க, செய்தி தொலைக்காட்சிகள் மோடி பயங்கரவாதியா? புலசாலியா! என்று பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,970. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.