Show all

கேரளாவில் இடது முன்னணி ஆட்சி அமையும்: கருத்துக்கணிப்பு

கேரளாவில் இடது முன்னணி ஆட்சி அமையும். பா.ஜ., முதல் முறையாக தனது கணக்கை துவங்கும்,என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.

இந்தியா டிவி - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடது முன்னணி ஆட்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 140 தொகுதிகளில் 89 தொகுதிகளை இடது முன்னணி கைப்பற்றும். ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைக்கும். பா.ஜ., முதன்முறையாக இங்கு தனது கணக்கை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரே ஒரு இடம் இந்த கட்சிக்கு கிடைக்குமாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.