Show all

கருத்துப்பரப்புதலா, இல்லை உண்மையிலேயே கருத்துக் கணிப்புதானா! பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என டைம்ஸ்நவ் ஊடகம்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டைம்ஸ்நவ், ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 543 தொகுதிகளுக்கு நடத்தப்படும் இத்தேர்தலில் பாஜக கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக டைம்ஸ்நவ் ஊடகம் தெரிவிக்கிறது. 

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் கட்சிகள் தங்கள் கருத்துப் பரப்புதலைத் தொடங்கியிருக்கின்றன. 

அண்மைக் காலங்களில், மக்கள் நடுவே தங்களுக்கு ஆதரவான நேர்மறை எண்ண அதிர்வுகளை உருவாக்கும் நோக்கமாக வளர்ந்த பெரிய கட்சிகளால் கருத்துக் கணிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டைம்ஸ் நவ், விஎம்ஆர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் நோக்கம் உண்மைதன்மையை மக்கள் ஆராய்வார்கள்.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கும் யுடிஎப் (ஐக்கிய ஜனநாயக முன்னணி) கூட்டணி 16 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், இடது சாரிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பாம். 

ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 22 தொகுதிளிலும், தெலுங்கு தேசம் கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ்க்கு இந்த மாநிலத்தில் ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

தெலங்கானாவில் 17 தொகுதிகள் உள்ள நிலையில் மாநில கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 13 தொகுதிளிலும், பாஜக 2, காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு. 

28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில், பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் பெற்றி பெற வாய்ப்பு. 

42 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்கம் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளிலும், பாஜக 11 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

பிகாரில் மொத்தமாக 40 தொகுதிகள் உள்ள நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு. 

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக 8 தொகுதிளிலும், காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

21 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில், பாஜக 14 தொகுதிகளிலும், பிஜூ ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

14 தொகுதிகளை உள்ளடக்கிய அஸ்சாமில் காங்கிரஸ்க்கு 4, பாஜகவுக்கு 8, ஐடியுஎப்க்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு. 

48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில், பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

நாட்டில் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், பாஜகவுக்கு 42 தொகுதிகளும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு 36 தொகுதிகளும், காங்கிரஸ்க்கு 2 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு. 

5 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டில் பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

மத்திய பிரதேசத்தில் பாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பு. 

10 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

ஜம்மு காஷ்மீரில் பாஜக 2 தொகுதிகளிலும், ஜெகேஎன் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

4 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெறும். 

ஒரே ஒரு தொகுதியைக் கொண்ட சண்டிகரில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் பாஜக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு. 

திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும், பாஜக, அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தமாக 543 தொகுதிகளுக்கு நடத்தப்படும் இத்தேர்தலில் பாஜக கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 125 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தொகுதிகள் 543ல் சரிபாதி என்பது 271.5 ஆகும். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேரவைத்தலைவருக்கு ஒரு தொகுதி சேர்த்து 278 தொகுதிகள் இருந்தால் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்கலாம்.

கருத்துக் கணிப்பில் அப்படி துல்லியமாக மக்கள் மனதை கணிக்க முடியாது. தனிப் பெரும்பான்மைக்கு 25 விழுக்காடு தொகுதிகளாவது சேர்த்துத் தேவைப்படும். அந்த வகையில் பார்த்தால் தனிப் பெரும்பான்மைக்கு தேவை 271.5ம் இருபத்தைந்து விழுக்காடு தொகுதிகள் 67.875 என 340 தொகுதிகள் பெரும்பான்மைக்கு தேவைப்படும். பாஜக கூட்டணி 283 தொகுதிகள் அதுவும் பாஜக தனித்து அல்ல கூட்டணியாக என்கிற போது, அமையப் போவது கூட்டணி ஆட்சிதான் என்றே இவர்களின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 

ஆனால் இந்தக் கருத்துக் கணிப்பாளர்கள் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திலிருந்து, இது கருத்துக் கணிப்பு அன்று. பாஜக ஆதரவு மனநிலையை மக்களிடம் தோற்றுவிப்பதற்கான கருத்துப்பரப்புதலே என்று தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.