Show all

வரவு-செலவு திட்டம் தாக்கல் நிலையில் பங்கு வர்த்தக முதலீட்டாளர்கள் எச்சரிக்கை.

2016-17-ம் ஆண்டுக்கான நடுவண் அரசின் வரவு-செலவு திட்டத்தை நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டார்.

வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதால் காலையில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள். இதனால் மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் சரிந்தது.

 

பின்னர் அருண்ஜெட்லி பொது வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்து அறிவிப்புக்களை வெளியிடத் தொடங்கியதும் பங்குச் சந்தை எழுச்சி அடையத் தொடங்கி 140 புள்ளிகள் அதிகரித்தது.

ஆனால், முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தப்படி அறிவிப்புகள் வெளியிடப்படாததால் சரியத் தொடங்கி,

ஒருகட்டத்தில் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. அதே போல் நிப்டி 200 புள்ளிகளுக்கும் கீழ் சரிவை சந்தித்து. பின்னர் முதலீட்டாளர்களிடையே சாதகமான போக்கு காணப்பட்டதால் ஏற்றம் பெற்று அதிகப்பட்சமாக 850 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் மீண்டும் சரியத் தொடங்கியது.

 

இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 152.30 புள்ளிகள் சரிந்து, 23002 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகப்பட்சமாக ஓ.என்.ஜி.சி. பங்குகள் 10.16 சதவீதம் சரிந்தது. மாருதி சுசுகி, கெய்ர்ன் இந்தியா, பெல். இன்போசிஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

 

தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 42.70 புள்ளிகள் சரிந்து, 6987.05 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுக்கு வந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.