Show all

இந்தியப் போர் விமானங்களில், பெண் பைலட்டுகளை நியமிக்க, நடுவண் அரசு ஒப்புதல்.

இந்திய விமானப்படையின் போர் விமானங்களில், பெண் பைலட்டுகளை நியமிக்க, நடுவண் அரசு, ஒப்புதல் அளித்தது.

இந்திய ராணுவத்தில், சிக்னல் கட்டுப்பாடு, பொறியியல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகளில், பெண்களுக்கு, தற்போது பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. போர் தாக்குதல்களில், இதுவரை, பெண்கள் நேரடியாக பங்கேற்கவில்லை.ஆனால், வளர்ந்த நாடுகளில், ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

எனவே, இந்திய ராணுவத்தின் முப்படைகளின், அனைத்து பிரிவுகளிலும், பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், இந்திய விமானப்படையில், போர் விமானங்களில், பெண் பைலட்டுகளை நியமிக்க, நடுவண் அரசு, ஒப்புதல் அளித்தது.

ராணுவ அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்திய விமானப்படை போர் விமானங்களில் பெண்களை நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. போர் விமானப்படை அகாடமியில், தற்போது பயிற்சி பெற்று வரும் பெண்களில் இருந்து, போர் விமான பைலட்டுகள் தேர்ந்தெடுக்கப்படுவர். வளர்ந்த நாடுகளைப் பின்பற்றி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின், போக்குவரத்து, ஹெலிகாப்டர் உள்ளிட்ட பிரிவுகளில், இதுவரை நியமிக்கப்பட்ட பெண்களின் பங்கு, ஆண்களுக்கு இணையாக சிறப்பாக உள்ளது. போர் விமானங்களில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்படுவதால், அவர்கள், தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில், முதல் முறையாக, போர் தாக்குதல் நடவடிக்கைகளில், பெண்கள் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

  


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.