Show all

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது: நவாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

தெற்கு ஐரோப்பாவில் மத்திய தரைகடலில் அமைந்துள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார்.

இதையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியில்,

இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுக உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை எவ்வித நிபந்தனைக்கும் உட்பட்டதாக இருக்கக்கூடாது. பாரீஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைப் பாகிஸ்தான் கடுமை யாகக் கண்டிக்கிறது. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் பிரான்ஸின் வலியை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பிரிட்டன் பிரதமர்கேமரூன் பாராட்டினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.