Show all

கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார காலத்திற்கு ரத்து செய்து நடுவண் அரசு உத்தரவு.

கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார காலத்திற்கு ரத்து  செய்து நடுவண் அரசு உத்தரவு.

காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவரான சையது அலிஷா கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார காலத்திற்கு ரத்து  செய்து நடுவண் அரசு நேற்று திடீரென உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வருகிற 27ம் தேதி முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள கிலானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கிலானி தவிர, காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாஸ் உமர் பாரூக் உள்ளிட்டோருக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 9 மாத காலம் செல்லுபடியாக கூடிய பாஸ்போர்ட் கிலானிக்கு வழங்கப்பட்டிருந்தது.  கடந்த காலத்திலும் இது போன்ற கூட்டத்தில் பங்கேற்க கிலானிக்கு பலமுறை அழைப்பு வந்தது. ஆனால் முறையான பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை நடுவண் அரசு திடீரென ரத்து செய்துள்ளதால் தற்போதும் கிலானியால் அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.