Show all

நான் தனி ஆள் இல்லை என்பதை பாரதிய ஜனதா மறந்து விட வேண்டாம்.

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். யாருக்கும் தலை வணங்கவும் மாட்டேன் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பகிரங்கமாக அறைகூவல் விடுத்துள்ளார;.

இது குறித்து மாயாவதி செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், தேசிய நகர்புற சுகாதாரத் திட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழலில் என்னைத் தொடர்பு படுத்த நடுவண் பாரதிய ஜனதா அரசு முயன்று வருகிறது. இதற்காக சிபிஐ-யை நடுவண் அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

தேசிய நகர்புற சுகாதாரத் திட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழலுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் அமைச்சரவை கூட்டத்தில் தான் எடுக்கப்படுகிறது. முதல்வர் தனிப்பட்ட முறையில் முடிவு எடுப்பதில்லை. என்னை இழிவு படுத்த பாஜக முயன்று வருகிறது.

ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். யாருக்கும் தலை வணங்கவும் மாட்டேன். நான் தனி ஆள் இல்லை என்பதை பாரதிய ஜனதா மறந்து விட வேண்டாம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உத்தரவுபடி மோடியின் பாரதிய ஜனதா அரசு இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் செய்ய முயன்றால் தேசிய அளவில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.