Show all

12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து மும்பை ‘மோக்கா’ சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு.

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி தீவிரவாதிகள் 7 மின்சார ரெயில்களில் பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 188 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 829 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் கமல் அகமது அன்சாரி, தன்வீர் அகமது அன்சாரி, முகமது பைசல் சேக், எக்தேசாம் சித்திக், முகமது மஜித் சபி, சேக் ஆலம், முகமது சலீம் அன்சாரி, முசாமில் சேக், சொகைல் முகமது சேக், சமீர் அகமது சேக், நவீத் உசைன் கான் மற்றும் ஆசிப் கான் ஆகிய 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து மும்பை ‘மோக்கா’ சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை விதிப்பது என்பது குறித்த விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.  அப்போது குற்றவாளிகள் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வ வாக்குமூலம் அளித்தனர். ஒருவாரத்திற்கும் மேலாக தண்டனை வழங்குவது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.

தண்டனை தொடர்பான விசாரணை முடிந்ததையடுத்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தண்டனை விவரம் வழங்கப்படும் என்று மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், மும்பையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.