Show all

இந்தியாவும் சீனாவும் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு போர் பயிற்சி .

10 நாட்களுக்கான தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப் போர் பயிற்சியை இந்தியாவும் - சீனாவும்  இன்று துவக்கின. ஆண்டுதோறும் தீவிரவாத ஒழிப்பு போர் பயிற்சியைக் கூட்டாக நடத்த இந்தியாவும் சீனாவும் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு போர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான போர் பயிற்சி சீனாவின் குன்மிங் நகரில் இன்று துவங்கியது. இந்தியாவின் சார்பாக நாகா ரெஜிமென்ட்டின் இரண்டாவது பட்டாலியன் இதில் பங்கேற்கிறது. இந்த பட்டாலியனைச் சேர்ந்த 175 ராணுவ வீரர்கள், இந்திய விமானப்படை விமானம் மூலம் குன்மிங் நகருக்கு சென்றுள்ளனர்.

சீனா சார்பில் அதன் ஒரு ராணுவ மண்டலத்தின் 14வது போர்ப் பிரிவு இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.  வரும் 22-ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டுப் போர் பயிற்சியில் தீவிரவாதிகளை வெற்றிகரமாக ஒழிப்பது குறித்த போர்த் தந்திரங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்படும் என தெரிகிறது. கடந்த 2007-ம் ஆண்டு முதலாவது கூட்டு போர் பயிற்சி சீனாவிலும், இரண்டாவது கூட்டுப் பயிற்சி கர்நாடகாவின் பெல்காமிலும் நடத்தப்பட்டது. நான்காவது கூட்டு பயிற்சி மகாராஷ்டிராவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.   

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.