Show all

சென்னையில் இந்த ஆண்டு புத்தாண்டு நடன விருந்து கொண்டாட்டங்கள் இல்லை

சென்னையில் இந்த ஆண்டு புத்தாண்டு நடன விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் ஏதும் நடத்துவது இல்லை என சென்னை நட்சத்திர உணவக நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் உள்ள நட்சத்திர உணவகங்களில் நடனத்துடன் கூடிய மது விருந்துகள் நடைபெறும். டிசம்பர் மாதம் தொடங்கிய உடனேயே நட்சத்திர ஹோட்டல் நிர்வாகங்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடன விருந்துக்கான அனுமதி கேட்டு மனு கொடுப்பார்கள்.

இந்த ஆண்டு சில நட்சத்திர உணவக நிர்வாகங்களே நடன விருந்து நடத்த அனுமதி கேட்டுள்ளன. மழை வௌ;ளத்தால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான நட்சத்திர உணவக நிர்வாகங்கள் நடன விருந்துகள் நடத்தும் முடிவை கைவிட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.