Show all

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் தேதி நாளை வெளியாக வாய்ப்புள்ளது.

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பு தனது பதில் வாதத்தை வைத்து வருகின்றனர். நாளையுடன் கர்நாடக அரசின் வாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் நாளைய தினமே இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் கர்நாடக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும் வாதத்தை முன்வைத்தனர்.

பின்னர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் 4 நாட்கள் வாதிட்டார். சசிகலா தரப்பு வாதமும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் விசாரணை மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கர்நாடக தரப்பில் ஆச்சாரியா பதில் வாதத்தை முன்வைத்தார். கர்நாடக தரப்பு வாதம் நாளையுடன் முடிவடைந்ததும், இந்த வழக்கின் தீப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கு முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்தால் இது தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.