Show all

மகாபாரதத்தில் தான் தொடங்கியது போலிச் செய்திகள்! நடுவண் தகவல் ஆணையர் மாடபூசி சிறிதர்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹைதராபாத்தில் நடந்துவரும் போலிச் செய்தி குறித்த பிபிசி கருத்தரங்கில் பேசிய நடுவண் தகவல் ஆணையர் மாடபூசி சிறிதர் மகாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் இருப்பதாக கூறினார்.

தேர்தலோ, போரோ, எதிர்த் தரப்பின் பலவீனத்தை தெரிந்துகொண்டால் ஒருவர் வெற்றி பெறலாம். பயனுள்ள உண்மைச் செய்திகளைப் பயன்படுத்தினாலும், போரிலோ, தேர்தலிலோ வெற்றி பெறலாம். அதைப்போலவே தேர்தலிலும், போரிலும் வெற்றி பெறுவதற்காக போலிச் செய்திகளும் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மைச் செய்திகளைவிட போலிச் செய்திகள் எளிதில் சென்று சேர்கின்றன. போலிச் செய்திகளை உருவாக்கும் நபர் அது போலிச் செய்தி என்று தெரிந்தே அதை உருவாக்குகிறார். இப்போது போலிச் செய்தியை எப்படி அடையாளம் காண்பது என்பதே விசயம்?

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் பல சமூக ஊடகக் கணக்குகளோடு கூடிய சமூக ஊடக வலைப்பின்னல் இருக்கிறது. அவர்கள் செய்திகளை உருவாக்கி, மக்கள் மனங்களை இலக்காக வைத்து தகவல் போரை நடத்துகிறார்கள். அவர்கள் புரளிகளை, உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை உருவாக்குகிறார்கள். அதன் மூலம் மக்களை சாதி, வகுப்பு மற்றும் குழு போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பிரிக்கிறார்கள்.
மகாபாரதத்தில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக கிருஷ்ணன் பரப்பிய பொய்யால் துயருற்ற துரோணரை பாண்டவர்கள் கொன்றனர். இது மகாபாரதப் போரின் போக்கை மாற்றிய முக்கிய நிகழ்வு என்று குறிப்பிட்டார் மாடபூசி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.