Show all

செல்பி எடுப்பதால் தலையில் பேன்கள் பரவும்

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி” எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி” எடுக்கப்படுகிறது.

இன்றைக்கு 'செல்பி” ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு 'டிஜிடல் புற்று நோய” போல விரைந்து பரவுகிறது.

ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும் தனது செல்பிகளுக்குக் கிடைக்கும் லைக்குகளும், பார்வைகளும் இளசுகளை செல்பி எனும் புதை குழிக்குள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கின்றன.

அதிகமாக செல்பி எடுக்கும் மனநிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.

'செல்பி” எடுப்பதால் தலையில் 'பேன்”கள் பரவும் அபாயம் இருப்பதாக குழந்தைகள் நல டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் 'செல்ப” மோகம் அதி கரித்துள்ளது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்போனில் 'செல்பி” எடுத்துக் கொள்கின்றனர். அப்போது டீன்ஏஜ் வயதினர் தங்களது தலைகளை ஒரு வருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு 'பேன்”கள் பரவுகின்றன. இந்த தகவலைக் குழந்தைகள் நல மருத்துவர;கள் தெரிவித்துள்ளனர்.தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இது போன்ற 'பேன” தொல்லை இருப்பதாக கூறுகின்றனர். எனவே 'செல்பி” எடுக்கும் போது போட்டோவுக்கு 'போஸ” கொடுப்பவர்கள் தலைகளை ஒட்டி வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் சிறுவர்களை விட சிறுமிகளுக்கே பேன் தொல்லை அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.