Show all

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் காலமானாரா?

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் மாரடைப்பால் காலமானர் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எமஎஸ்எம்.கோ என்னும் இணையத்தளம் வெளியிட்ட பொய்யான தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியது.

இந்நிலையில் அர்னால்டின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கில் அந்த செய்தி பொய்யானது என நேற்று பதிவிட்டார்.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினர் கூறும் போது குறிப்பிட்ட இணையதள செய்தியின் படி 911 என்ற எண்ணுக்கு காலை 9.30 மணிக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது அதில்  அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர்  அவரது படுக்கையறையில் இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் ஏன் பரப்பப் பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் இதேபோல் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர், விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.