Show all

சீன ஓபன் பேட்மிண்டனில் சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு தகுதி

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் இகானை எதிர் கொண்டார். இதில் சாய்னா நேவால், 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வாங் இகானை எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சாய்னா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சாய்னா நேவால், 6ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் லி எக்ஸ்யூரியுடன் மோத உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.