Show all

இந்தியாவில், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது இதனைக் குறைத்திட வேண்டுகோள்.

பொருளாதார நிலைமை குறித்து ஆராய பிரதமர் மோடி, நடுவண் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், பிரதமர் மோடி, இந்திய தொழில்துறையினர் தைரியமாக இருங்கள், கடினமான முடிவுகளை எடுத்து, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என கூறியதாக, அந்த அமைப்பின் தலைவர் சுமித் மஜூம்தர் கூறினார்.

தொழில்துறை புத்துயியர் பெற வேண்டும் என பிரதமர் மோடி கூறியதாக அசோசெம் தலைவர் ரானா கபூர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 27 பேர் இந்த கூட்டத்தில் பேசினர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பிரச்னை பங்குச்சந்தைகளை தவிர மற்ற வகைகளில் இந்தியாவைப் பாதிக்கவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் வலிமையாக உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த ஆலோசனை கூறியதாகக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனைக் குறைத்து கடினமான முடிவுகளை எடுக்கவும், முதலீட்டை அதிகரிக்க உதவ வேண்டும் என வலியுறுத்தினர்.

எப்ஐசிசிஐ தலைவர் ஜியோத்சனா சூரி கூறுகையில், வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாகவும், இது பற்றி பலர் இந்த கூட்டத்தில் கூறியதாகவும் கூறினார்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகள் குறித்தும், அதன் மீதான தாக்கம் இந்தியாவில் குறைவாக இருப்பது குறித்தும், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் எடுத்துக்கூறினார்.

இந்த கூட்டத்தில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறைவாக இருப்பது குறித்தும், கடந்த ஜூன் மாத காலாண்டில், பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தனர். 2015-16ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என நம்பிக்கை நடுவண் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதத்தில் தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் இரண்டாவது ஆலோசனை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல், குமார் மங்கலம் பிர்பா, ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஐசிஐசிஐ வங்கியின் சந்தா கோச்சர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.