Show all

ஏ.ஆர்.ரகுமானுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம்.

முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு படம் தொடர்பாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் இறை தூதர் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு குறித்து, முகமத் மெசஞ்சர் ஆப் காட் என்ற பெயரில் சினிமா படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானைச் சேர்ந்த பிரபல இயக்குனர் மஜீத் மஜிதி என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார்.

இந்தப்படத்துக்கு மும்பையில் செயல்படும் 'ரசா அகாடமி” என்ற முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தில் பணியாற்றிய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மஜீத் மஜிதி ஆகியோருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து 'பத்வா” உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதில்

இஸ்லாம் மத கோட் பாட்டுக்கு எதிராக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், பிற மதக்கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.

இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ.ஆர்.ரகுமானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறி இருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை திரையிடக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு ரசா அகாடமி அமைப்பு தலைவர் சயீத் நூரி கடிதம் எழுதியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.