Show all

'மோடியே திரும்பிப்போ' மீண்டும் தலைப்பாகியுள்ளது தமிழகத்தில்! தேர்ந்தெடுத்தால் எய்ம்ஸ் உண்டு என்று தெரிவிக்க தமிழகம் வரும் மோடி

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு தருவது பாஜக அரசின் நோக்கமானால், எயம்ஸ் மருத்துவமனை தற்போது தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

நோக்கம்: எய்ம்ஸ் மருத்துவமனை தருவதாகச் சொல்லி வாக்கு வேட்டையாடுவது! அதன் பொருட்டு தமிழகம் வருகிறார் மோடி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைகிறது என்று தமிழக அரசு சொல்ல, 

இல்லை இல்லை அப்படியெல்லாம் திட்டம் இல்லை என்று கைவிரித்த மோடி அரசு, 

தற்போது நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு- 

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு, அதாவது அடுத்த ஆட்சியில் தங்களையே நியமித்தால் இந்த மருத்துவமனை ஒங்களுக்கு கிடைக்கும் என்கிற நப்பாசையைத் தூண்டும் செயல்பாட்டிற்காக தமிழகம் வருகிறார் இந்தியக் கார்ப்பரேட் தலைமை அமைச்சர் மோடி.

இதுவரை நடுவண் அரசு தமிழகத்திற்கு உதவி ஏதும் செய்யவில்லை என்றும், இது தேர்தலுக்கான அரசியல் என்றும் புரிந்திருக்கும் தமிழக மக்கள், 'மோடியே திரும்பிப் போ' என்கிற முழக்கத்தை இணையத்தில் தலைப்பாக்கியிருக்கிறார்கள்.

இந்த தலைப்பாக்கப் பட்ட சமூக வலைதள இடுகைகளில், நடுவண் அரசை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. பேரிடர் காலங்களில் தமிழகத்தை நடுவண் அரசு புறக்கணித்து விட்டதாக புகார்கள் கூறப்படுகின்றன. 

கஜா புயலின்போது 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். 11 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆனால் கஜா புயல் நிவாரண பணியின்போது தமிழகம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதள பதிவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

பெரும்பாலான பதிவுகளில் தமிழ்நாட்டின் வரைபடம் பெரியாரின் முகத்துடன் கூடியதாக இருப்பது போன்றும், அவர் 'மோடியே திரும்பிப்போ' என்று சொல்வதைப் போன்றதுமான பகடிஓவியங்கள் அதிகம் இருக்கின்றன. 

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், காவிரி விவகாரத்தில் ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, கர்நாடகத்திற்கு நடுவண் அரசு அனுமதி அளித்தது, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றால் நடுவண் அரசு மீது தமிழகத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. 

இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மோடி எதிர்ப்புக்கு பின்னால் நாங்கள் இல்லை. இது மக்களின் கோபம். எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும். இப்போது அது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். எதற்காக அடிக்கல் நாட்டு விழாவை தாமதம் செய்துள்ளனர்?. தேர்தல் வருவதால் இதுபோன்ற வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது என்றார். 

'மோடியே திரும்பிப்போ' தலைப்பாவது இரண்டாவது முறை. முன்னதாக சென்னையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொள்ள மோடி வந்தார். அப்போது இந்த 'மோடியே திரும்பிப்போ' தலைபபானது. பிரமாண்ட பலூன்களிலும் 'மோடியே திரும்பிப்போ' என்று எழுதி தமிழக மக்கள் பறக்க விட்டனர். எதிர்ப்புகளைத் தவிர்க்க சாலை வழியாக வருவதை விட்டு விட்டு உலங்கு வானூர்தி மூலம் வந்தார் மோடி. இன்று மோடி பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சிக்கு அருகே வைகோவின் மதிமுக கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,045.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.