Show all

நம்நாட்டின் அரசியலமைப்பை மாற்ற நினைத்தால் அது தற்கொலை செய்துகொள்வது போன்றது: மோடி

மோடி மக்களவையில்,

அரசியலமைப்பு சட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு விவாதத்தை முடித்து வைத்துப் பேசுகையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைவிட கருத்தொற்றுமையே முக்கியமானது. ஜனநாயகத்தில் நாம் அதனை மறந்துவிட முடியாது. தொடர்ந்து கூட்டாக பணியாற்றுவோம்.

அரசியலமைப்பில் மாற்றம் என்பது குறித்து யாரும் நினைக்க முடியாது. அவர்கள் அதனைச் செய்தார்கள் என்றால், அது தற்கொலை போன்றது என்று நான் நினைக்கின்றேன்.

நீதி, நிதி, நிர்வாகம் போன்றவற்றில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அரசியலமைப்பே மேலானது. நமது அரசியலமைப்பு சட்டரீதியான ஆவணம் அல்ல, சமூக அவணம்.

வேற்றுமை நிறைந்த இந்தியாவில் ஒற்றுமையை ஏற்படுத்துவது அரசியல் சாசனம்தான். நாட்டின் கௌவுரவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவது அரசியல் சாசனம்.

நீ, நான் என்ற வேற்றுமையைக் கடந்து நாம் என்ற அடிப்படையிலேயே இந்த விவாதம் நடக்க வேண்டும்.

நம் அரசியலமைப்பின் வலிமை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவை. நம் நாட்டின் அரசியலமைப்பை யாரும் மாற்ற முடியாது. அரசியலமைப்பை மாற்ற நினைத்தால் அது தற்கொலை செய்து கொள்வது போன்றதாகும். அரசியலமைப்பின்படியே நாட்டின் நிர்வாகம் நடைபெறும்.

வேற்றுமை நிறைந்த இந்தியாவுக்கு அரசியலமைப்பை உருவாக்குவது கடினமானதாக இருந்திருக்கும். அம்பேத்கரின் சிந்தனைகளும், கருத்துகளும் அனைத்து தலைமுறைக்கும் ஏற்றவை.

அரசை பற்றி விமர்சிக்க, நடுநிலையாக கருத்து கூற அம்பேத்கரையே பலரும் மேற்கோள் காட்டுகின்றனர். வாழ்நாளில் அம்பேத்கர் அவமானத்தை சந்தித்த போதும் அரசியலமைப்பில் அது பிரதிபலிக்கவில்லை. வாழ்க்கையில் விஷத்தை உட்கொண்டு அமிர்தத்தை அளித்தவர் அம்பேத்கர்.

முந்தைய அரசாங்கங்கள் ஏதும் செய்யவில்லை என யாரும் கூறமுடியாது. ஏற்கனவே ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளன. அதேபோல், அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன்தான் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

எல்லா விவாதத்திற்கும் கடைசியில் பிரதமர் கருத்து சொல்வது என்பது சாத்தியமில்லை. மற்ற உறுப்பினர்களைப் போல நானும் எனது கருத்தை பதிவு செய்யவே பேசுகிறேன்.

அவையில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக நம் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. அவையில் பெரும்பான்மையைக் காட்டிலும் கருத்தொற்றுமையே முதன்மையானது. அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளைப் போல், கடமைகளையும் பேச வேண்டிய தருனம் இது.

நாடாளுமன்றம் விரும்பிய சட்டங்களை இயற்ற முடிந்தால் சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்து விடும். அதேபோல், உச்சநீதிமன்றத்தின் விருப்பம் போல் சட்டங்களை மாற்ற அனுமதித்தாலும் சர்வாதிகாரம் உருவாகிவிடும்.

ஒரு பகுதி பலவீனமாக இருக்கும் போது ஒட்டுமொத்த சமூகமும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறமுடியாது. எனவே, அனைவரும் ஆரோக்கியமானவர்களாக அடியெடுத்து வைத்தால் நம் வலிமை முழுமையாக தெரியவரும்

பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் மற்றும் ஒடுக்கப்படடவர்களை முன்னேற்றுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். சமூக நீதி முக்கியம் என்றாலும் நமது அரசியலமைப்பால் எப்படி தலித், ஒதுக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கு உதவிசெய்ய முடியும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்திய சீர்திருத்தங்களின் மூலம் எங்கு பணி புரிந்தாலும் தொழிலாளர்கள் வைப்புநிதியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றார்.

இந்தியாவின் உண்மையான பலம் அரசியல் சாசனமே. அரசியல் அமைப்பின்படியே நாட்டின் நிர்வாகம் நடைபெறும்.

இந்திய அரசுக்கு ஒரேஒரு மதம்தான் உள்ளது, முதலில் இந்தியா... அரசுக்கு ஒரேஒரு மதபுத்தகமே உள்ளது, ‘அரசியலமைப்பு’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

1.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.