Show all

முதலமைச்சர் ஆவதே தமது விருப்பம் என்று தெரிவித்துள்ளார் கஞ்சா கருப்பு

 

     அரசியல் மீது ஆர்வம் உள்ளதாக கூறியுள்ள நடிகர் கஞ்சா கருப்பு, முதலமைச்சர் ஆவதே தமது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அக்கட்சியின் திருச்சொங்கோடு ஒன்றிய முன்னாள் செயலாளர் முத்துமணி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார்.

 

கருத்துப்பரப்புதலின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சா கருப்பு,

 

பல்வேறு கட்சிகள் எனக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. முத்துமணி கட்சி ஆரம்பித்தால் நானும், நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம்.

 

நான் முதலமைச்சர் ஆனால் பள்ளியில் மதிய உணவுக்கு மாணவர் ஒருவருக்கு முழு கோழி ஒன்று வழங்கப்படும். இது நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை. சீரியசாத்தான் சொல்றேன். சுயேட்சை வேட்பாளர் முத்துமணி வெற்றி பெற்றால் அனைத்து நதிகளும் இணைக்கப்படும்.  நான் படிக்காமல் போனதால் என்னை பலரும் ஏமாற்றிவிட்டார்கள். கோடிக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டேன். எனவே நான் முதலமைச்சரானால் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.