Show all

ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் 11வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்பட கோரிக்கை

 

     தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பளராக களம் காண்பவர் வசந்தி தேவி.

நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கை விரலில் எளிதில் அழியக் கூடிய மை வைக்கப்பட்டதால் பிரச்னை எழுந்தது. புகாருக்குப் பின் போலி மை பாட்டில்கள் அகற்றப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ மை வைக்கப்பட்டது.

இதனால், இ.சி.ஐ. பள்ளி வாக்கு மையத்தில் உள்ள 11 சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் வசந்தி தேவி.

 

மேலும், இது தொடர்பாக வசந்தி தேவி கூறும்போது,

போலி அடையாள மைக்கு பதில் வேறு மை மாற்றியதாக தேர்தல் ஆணையர் லக்கானி கூறியதை ஏற்க முடியாது. போலி மை பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும். அ.தி.மு.க.வினரும், அதிகாரிகளும் சதி செய்து போலி அடையாள மையை பயன்படுத்தி உள்ளனர் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.