Show all

உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிரடியாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்

     உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அம் மாநிலத்தில் அதிரடியாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கூறுகையில் இது ஜனநாயக படுகொலை, இதன் மூலம் ஜனநாயகத்தின் நம்பிக்கை வைக்காத கட்சி பா.ஜ.க. என்பது தெளிவாகிறது என விமர்சித்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியின்போது, காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத் முதல்வராக இருந்தார்.  அவரது கட்சியை சேர்ந்த 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அளும் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதுடன் முதல்வருக்கு எதிராகவும் பேசினர். அந்த கோஷ்டி சட்டமன்ற உறுப்பினர்கள்; எதிர் கட்சியாக உள்ள பா.ஜ.கவிற்கு ஆதரவு அளித்தனர்.

 

இதனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. அவரது அரசு இன்று சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இருந்த நிலையில் நேற்று உத்தரகாண்ட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி  கையெழுத்திட்டார்.  இதனைத் தொடர்ந்து ஆளுநரின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உத்தரகாண்ட் மாநில அரசு வந்தது.

 

மத்திய கேபினட்டின் பரிந்துரையின் பேரில் ,உத்தரகாண்ட்  மாநிலத்தில குடியரசுத்தலைவர் ஆட்சி  கொண்டு வருவதற்கு 356 விதியின் கீழ் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்;; 9பேர் அந்தக் கட்சிக்கு எதிராக போர்க்கொடி எழுப்பியதால் மாநில அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

 

இந்தச் சூழ்நிலையில் நடுவண் அமைச்சரவை நேற்று முன்தினம் இரவு  மாநிலத்தின் நிலைமையை விவாதித்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் சர்ச்சை இருப்பதால் அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த அவசர கூட்டத்தில்கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அசாம் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு தலைநகர் டெல்லிக்கு அவசரமாக திரும்பினார்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநர் கே.கே.பாலின் பல்வேறு அறிக்கைகளை கேபினட் தனது பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு விவாதித்தது.  ஆளுநர் அறிக்கைகளில் மாநிலத்தின் அரசியல் நிலமை கொந்தளிப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கும் இடையூறுகள் ஏற்படும் என ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அந்த மாநிலத்தின் அரசியல் கொந்தளிப்பு நிலமையை நடுவண் நிதியமைச்சர் அருண்ஜெட்லி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் நேற்று முன்தினம் இரவு விளக்கிக்கூறினார்.

 

எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஜெட்லி வேண்டுகோள் விடுத்தார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய 9கோஷ்டி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் கோவிந்த் சிங் குன்ஜ்வால் தகுதி நீக்கம் செய்தார். அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ஹரீஷ் ராவத்  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம் என இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுத்துள்ளார் எதிர் கட்சியினர் விமர்சித்தனர்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் செய்யப்படுவது குறித்து, காங்கிரஸ் கூறுகையில், இது ஜனநாயக படுகொலை என விமர்சித்தது. இந்த நடவடிக்கை மூலம் பா.ஜ .கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்காத கட்சி என்பது தெரிகிறது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.