Show all

30-ம் தேதி, ஓஐஎஸ்எல் அறிக்கை தாக்கல்.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் வரும் 30-ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குள்ள தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல் நடவடிக் கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக ‘இலங்கை மனித உரிமைகள் விசாரணைக் கான ஐ.நா. தூதரக அலுவலகம்’ (ஓஐஎஸ்எல்) விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளது.

கடந்த மார்ச் 2014-ல் மனித உரிமைகள் ஆணைய தீர்மானத்தின் பின்விளைவாக இந்த அறிக்கை தயார் செய்யப் பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டம் வரும் 14-ம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போதைய நிகழ்ச்சி நிரல் அட்டவணைப்படி வரும் 30-ம் தேதி, ஓஐஎஸ்எல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அமர்வு சுமார் 3 மணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா வுக்கான துணைச் செயலாளர் நிஷா பிஸ்வால், ‘ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படும்’ எனக் கூறியிருந்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.