Show all

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

எனக்கோ, எனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று படேல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக படேல் சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறியிருந்த நிலையில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

படிதர் (படேல்) அனமத் அந்தோலன் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஹர்திக், தங்கள் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்துக்கு படேல் இனத்துக்காக போராடும் மற்றொரு அமைப்பான சர்தார் படேல் குழுவைச் சேர்ந்த பி.சி.படேல் ஆதரவு தெரிவித் திருந்தார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவ தாக பி.சி.படேல் கூறியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, ஹர்திக் படேல் கூறும்போது, “பி.சி.படேல் எங்களுடன் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனது தலைமையிலான பாரதிய ராஷ்டிரவதி கட்சி போட்டியிடும் என்று நேற்று முன்தினம் அவர் அறிவித்துள்ளார். எனக்குத் தெரிந்தவரை இந்தக் கட்சி கடந்த 2003-ம் ஆண்டே பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தப் போராட் டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.

எனக்கு அரசியல் தலைவர் ஆக வேண்டும் என்ற எண்ணமோ, அரசியலில் ஈடுபடும் எண்ணமோ இல்லை. எங்கள் அமைப்பைச் சேர்ந்த யாரும் தேர்தலில் சுயேச்சையாகக்கூட போட்டியிட மாட்டார்கள். நான் தேர்தலில் போட்டியிட்டால் என் வீட்டின் மீது கல் வீசலாம்.

எனவே, அரசியலில் ஈடுபடும் எண்ணத்துடன் செயல் படுபவர்களிடமிருந்து விலகி நிற்க வேண்டும்” என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.