Show all

ரஷ்யப்படைகள் தீவிரவாதிகளின் பதுங்குக்குழிகள் மீது தாக்கும் காணெளிக் காட்சி; வெளியீடு.

சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் அந்நாட்டில் ஒரு நகரைத் தாக்கும் காணெளிக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அஸாத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வரும் நிலையில் மற்றொரு பக்கம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பஷர் அல்-அஸாத்திற்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள், கடந்த சில நாட்களாக தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகள் மீது நடத்திய வான் வழித்தாக்குதல் தொடர்பான காணெளிக்  காட்சிகள் போர்க்களத்தை கண்முன்னே நிறுத்துகின்றன. ரஷ்ய வான்படை சீறிப்பாய்ந்து நடத்திய ராக்கெட் தாக்குதலில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல மக்கள் படுகாயமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 30-ம் தேதி அந்நாட்டின் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முன்னூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.