Show all

ஐதராபாத் ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள நடுவண் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரை வைக்கவேண்டும் என்று நடுவண் அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, முன்னாள குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

40 ஆண்டுகாலம் விஞ்ஞானியாகவும், சிறந்த அறிவியல் நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் அப்துல்கலாம். அவர் 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நாட்டின் குடியரசுத்தலைவராகவும் பதவி வகித்தார். ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.

1982-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள “பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் இயக்குநராக அப்துல்கலாம் இருந்தபோது அவருடைய வழிக்காட்டுதல்படி, பாதுகாப்பு துறையில் நாடு தனிச்சிறப்பை மேம்படுத்த மையத்தில் பல ஆய்வு பணிகள் நடத்தப்பட்டது நினைவு கூறத்தக்கது.

ஏவுகணை மனிதர் என்ற சிறப்பு பெயரும் பெற்ற அப்துல்கலாம் கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் ஒரு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அவருடைய 84-வது பிறந்தநாள்விழா நாள் (வியாழக்கிழமை) நாடுமுழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.