Show all

பத்மஸ்ரீ விருதை பஞ்சாப் எழுத்தாளர் தலிப்கவுர் திவானா திருப்பி அளித்துள்ளார்.

நடுவண் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பஞ்சாப் எழுத்தாளர் தலிப்கவுர் திவானா திருப்பி அளித்துள்ளார்.

கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் குறித்து நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. சாகித்ய அகாடமி விருதுபெற்ற பல எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதினைத் திருப்பி அளித்து வருகின்றனர். மேலும், விருதுகளைத் திருப்பித் தரும் எழுத்தாளர்களின் பட்டியல் தொடர்ந்து நீள்கிறது.

இந்நிலையில், கடந்த 2004 பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற பஞ்சாப் எழுத்தாளர் தலிப்கவுர் திவானா தனது விருதைத் திருப்பி அளித்துள்ளார். அவர் நடுவண் அரசுக்கு விருதை திருப்பித் தந்து கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில்,

கௌதம புத்தரும் குருநானக்கும் பிறந்த மண்ணில் சீக்கியர்கள் மீது கடந்த 1984ல் நடந்த வன்முறைகளும், தற்போது சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் மதவாதத்தினால்தான் நடத்தப்படுகின்றன. இது நாட்டிற்கே அவமானம் அளிப்பதாகும்.

நீதிக்காகவும் உண்மைக்காகவும் நிற்கும் யாரையும் கொலை செய்வது கடவுள் மற்றும் உலகின் முன் நம்மை கூனிக் குறுகி நிற்க வைப்பதாகும். எனவே இவற்றை ஆட்சேபிக்கும் விதமாக நான் எனது பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.